Thursday, March 3, 2011

வாழ்க மகளிர் தினம்

வழிவழி வந்த வீரம் வருக!
நடுவிடை புகுந்த காரிருள் அகல்க!
சிலம்பால் பெரும் புயல் படைத்த கைகள் வந்து
புலம்பல் மனங்களை வெல்க!
அடைந்து கிடந்த அவலம் நீங்கி தோல்வி
தடைகள் தகர்த்து வருக! வருக!

பகுத்தறிவு பகலவன் வந்தான்
உனக்கும் உண்டு உரிமை என்றான்
சகோதரத்துவம் சமத்துவம் உனக்கும்தான் பெண்ணே
துயில் களைந்து செருவெல்ல வா!
வீடாள்வது மட்டும் அல்ல!
நாடாள்வதும் உன்னால் முடியும் என்ற நம்பிக்கை
எல்லோருக்கும் வந்துவிட்டது!
கால நதியில் கலந்து,
போகும் வழியெங்கும்
வெற்றி கொள்ள, நாடே காத்திருக்கிறது
உனக்காக!
வாழ்க மகளிர் தினம்!!