Monday, March 23, 2009

"மருந்தே உணவு; உணவே மருந்து"

உங்களுக்கு நோய் ஏற்படும்போது மருத்துவரைப் பார்க்கிறீர்கள். மருந்து கொடுக்கிறார். நோய் குணமாகி விடுகிறது. இப்படி இருக்கும் வரை சரி.

நோய் உருவாகிறது. மருத்துவர் மருந்து கொடுக்கிறார். நோய் தற்காலிகமாக குணமாகிறது. தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறீர்கள். நோய் தீர்ந்தபாடில்லை. நீண்ட காலம் மருந்து எடுக்கிறீர்கள். மருந்துகளால் வேறு உபாதைகள் வருகின்றன. அதற்கும் வேறு மருந்துகள் எடுக்கிறீர்கள். மருந்துகளின்றி உங்களால் வாழ முடியாத நாள் ஒன்று வந்துவிடும். அப்போதும் விசுவாசத்தோடு அதே மருந்துகளையும் கொஞ்சமும் மாற்றமின்றி அதே உணவுகளையும் உண்டு வருகின்றீர்கள்.