Saturday, October 30, 2010

Examination for Recruitment of Postal Assistants

1. Prepare aptitude with Quantitative Aptitude, Author: RSAggarwal
2. You will be given 2 pages of text (A4 size). You have to type in MSWord. Time 15 Min. If the format is left aligned, you should also need to type in left aligned. If it is justified, you make it justified.(5 marks)
3. You have to attend Data entry test. You will be given a table with 15 entries as given below.
Account NO. Date of Opening Name Address1 Address2 Address3 City
1235 1.10.2009 Sandeep Main Road Arumunageri Tirunelveli Tirunelveli
2586 01.12.2006 Krishnakumar 12, North st Valliyur Tirunelveli Tiruneveli
..
You have to enter these details in text boxes. (refer screen shot)

Wednesday, September 22, 2010

மாறுதல் விண்ணப்ப மாதிரிகள்(Rule 38, Intra Dvn Tfr etc)

ஒரு கோட்டத்திலிருந்து மற்றொரு கோட்டத்திற்கு விதி 38 இன் படி மாறுதல் வேண்டி விண்ணப்பிக்க படிவம் தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

ஒரு கோட்டத்துக்குள் மாறுதல் வேண்டி விண்ணப்ப மாதிரிக்கு இங்கே சொடுக்கவும் 

Saturday, September 18, 2010

Wednesday, September 15, 2010

Friday, September 3, 2010

பி. டி. சி யின் கலை நிகழ்ச்சி-கடையம் விஜய் செல் பேசி

நண்பர்களே! பி. டி. சி யின் கலை நிகழ்ச்சிகளில் இடம்பிடித்த ஆர் எம் எஸ் நண்பர்களின் கலக்கல் நிகழ்ச்சிகளின் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள்(கடையம் விஜய் செல் பேசியில் எடுத்தவை).
புகைப்படங்களை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

வீடியோ காட்சிகளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

மதுரை நண்பர்கள் புகைப்பட தொகுப்பு

மதுரை நண்பர்கள் புகைப்பட தொகுப்பு. இங்கே சொடுக்கி தரவிறக்கவும்

தமிழ் நாடு பின்கோடு

தமிழ் நாடு பின்கோடு விபரங்களை கீழ்க்கண்ட முகவரியில் சொடுக்கி பெற்றுக்கொள்ளவும்.
தரவிறக்க இங்கே சொடுக்குக

Saturday, August 28, 2010

கதம்ப வண்டு

ஒரு நாள் திடீரென தீயணைப்பு வீரர்கள் எங்கள் அலுவலவகத்திற்கு வந்து நின்றனர். என்னது எதுக்கென்று விசாரித்ததில், கதம்ப வண்டுகளை அழிக்க வந்தவர்கள் என்பது தெரிந்தது. அதென்னப்பா கதம்ப வண்டு? விசாரித்ததில் அதிர்ச்சிகரமான விசயங்கள் தெரியவந்தன.

Wednesday, August 11, 2010

ராஜராஜனின் வெற்றிகள்

வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தபோது இராஜராஜ சோழனின் வெற்றிகள் பற்றிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. (கட்டுரையை படிக்க: http://festival2009.ponniyinselvan.in/souvenir/rajarajarin-vetrigal-dr-nalini.html ) ஒரு மன்னனின் வெற்றி என்றால், எத்தனை நாடுகளை பிடித்தான்? எத்தனை போரில் வென்றான்? என்று ஒரு கணக்கு பட்டியல் தான் இருக்கும் என்று நினைத்து படித்தேன். ஆனால் ராஜராஜனின் வெற்றி அவன் தன்னுடைய நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்ததுதான் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

ரசமா? சாம்பாரா?

மனைவி : ஏங்க! இன்னிக்கு ரசம் வைக்கவா? சாம்பார் வைக்கவா?
கணவன்: எதையாவது முதல்ல வை. அப்புறம் பேர் வச்சுக்கலாம்.
மனைவி: ?!?!?

நன்றி: திரு சரவணன்

Thursday, July 29, 2010

சிறப்பான வாழ்க்கைக்கு எட்டு வழிகள்:


# எப்போதும் நேரத்தை கடைபிடிக்கவும்
# யாரையும் ஏமாற்ற வேண்டாம்
# எளிமையான வாழ்வு
# குறைந்த எதிர்பார்ப்பு
# அதிக உழைப்பு
# எப்போதும் புன்னகை
# முடிந்தவரை பிறர்க்கு உதவி
#அனைவரையும் நேசியுங்கள்

(குறுஞ் செய்தி : கோபிநாத்,கோவை)

காயம்

உன்னை காயப்படுத்த
வேண்டும்
என்று
எனக்கு விருப்பம் இல்லை;
ஆனால்
உன்னை காயப்படுத்தாமல்
எனக்கு வேறு அடைக்கலம்
இல்லை;
--- மரங்கொத்தி பறவை

(குறுஞ் செய்தி : மோகன் ராஜ், அஞ்சல் துறை)

நண்பர்கள் அவசியம்


தோல்வி வந்தால் பொறுமை அவசியம்;
வெற்றி வந்தால் பணிவு அவசியம்;
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்;
எது வந்தாலும் நண்பர்கள் அவசியம்.
(குறுஞ் செய்தி : மோகன் ராஜ், அஞ்சல் துறை)

இலவச இதய சிகிச்சை


குழந்தைகளுக்கான (1 முதல் 10 வயது வரை) இலவச இதய சிகிச்சை பெங்களுருவில் மே பீல்ட் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்யசாய் மருத்துவ மனையில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080 -28411500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்க.
நீங்களும் ஒரு உயிரை காப்பாற்றிய பெருமைக்குரியவர் ஆகலாம்.

Monday, April 5, 2010

உலகை மாற்ற உணவை மாற்று

உலகை மாற்ற உணவை மாற்று
-திருமதி ரதி லோகநாதன்


இன்றைய உலகம் அழிவுப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் குற்றங்களும், இயற்கை சீற்றங்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? மனித குலம் எங்கோ பெரும் தவறு செய்துகொண்டிருக்கிறது. என்ன தவறு? போர், நீதி நூல்கள், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றால் நீதியை நிலைநாட்ட முடியவில்லை. போரினால் அழிவே அதிகம். நீதி நூல்களால் உலகம் திருந்தும் என்றால், திருக்குறள் எழுதியபோதே, உலகம் திருந்தியிருக்கும். அதுவும் திருந்தவில்லை. காவல்துறையும், நீதிமன்றமும் துவங்கினால் உலகம் திருந்தியிருக்கும் என்றால், இப்போது ஒரு குற்றமும் நடக்கக் கூடாது. ஆனால் அதுவும் நடக்க வில்லை. வெறும் சட்டத்தினாலும், கட்டுப்பாடுகளினாலும் உலகை திருத்த முடியாது. சரி, உலகை மாற்ற என்ன செய்யவேண்டும்.