வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தபோது இராஜராஜ சோழனின் வெற்றிகள் பற்றிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. (கட்டுரையை படிக்க: http://festival2009.ponniyinselvan.in/souvenir/rajarajarin-vetrigal-dr-nalini.html ) ஒரு மன்னனின் வெற்றி என்றால், எத்தனை நாடுகளை பிடித்தான்? எத்தனை போரில் வென்றான்? என்று ஒரு கணக்கு பட்டியல் தான் இருக்கும் என்று நினைத்து படித்தேன். ஆனால் ராஜராஜனின் வெற்றி அவன் தன்னுடைய நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்ததுதான் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.