வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தபோது இராஜராஜ சோழனின் வெற்றிகள் பற்றிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. (கட்டுரையை படிக்க: http://festival2009.ponniyinselvan.in/souvenir/rajarajarin-vetrigal-dr-nalini.html ) ஒரு மன்னனின் வெற்றி என்றால், எத்தனை நாடுகளை பிடித்தான்? எத்தனை போரில் வென்றான்? என்று ஒரு கணக்கு பட்டியல் தான் இருக்கும் என்று நினைத்து படித்தேன். ஆனால் ராஜராஜனின் வெற்றி அவன் தன்னுடைய நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்ததுதான் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய மக்களை அவன் எவ்வாறு நேசித்தான்? எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்தான். அவன் மனிதர்களையும் , கலைகளையும், வரலாற்றையும் எவ்வாறு நேசித்தான் என்றும் அதனாலேதான் அவன் இன்னமும் மக்கள் மனதில் வாழ்கிறான் என்றும் குறிப்பிடுகிறார் இந்த ஆராய்ச்சியாளர்.
அஞ்சல் துறை ஆய்வாளர், நண்பர் திரு. ஜெயகுமாரவேல், அவர்கள் இராஜன் பற்றி கூறியது நினைவில் வருகிறது.
உடையார் பாளையம் என்ற ஒரு கிராமம் தற்போதைய அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. அங்கு ராஜராஜன் காலத்தில் முன்குடுமி அய்யங்கார்கள் எனப்பட்டோர் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இன்று அவ்வகையில் அந்த ஊரில் யாருமே இல்லை. அவர்கள் அனைவரும் ராஜராஜன் காலத்தில் வெளியேற்றப்பட்டனர். ஏன் தெரியுமா? ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் இவர்கள் என்று சந்தேகம் வந்தபிறகு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர் . ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 15 ஆண்டுகள் கண்காணிப்பு தொடர்ந்தது. ஒரு நாள் கொன்றவனே தான் கொன்றதாக பேச்சு வாக்கில் உளறி வைக்க, அது ராஜராஜன் காதுக்கு போனது. உடனடியாக அவர் விசாரிக்கப்பட்டார். உண்மை வெளிவந்தது. ராஜராஜன் என்ன செய்தார் தெரியுமா? ஒன்றும் பேசவில்லை. கொலைகாரன் மற்றும் அவனின் உறவினர்கள், பெண் கொடுத்தவன், பெண் எடுத்தவன், பங்காளி என அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டார்(சேர நாட்டுக்கு). யாரையும் கொலை செய்யவில்லை. பழிக்கு பழி தீர்க்கவில்லை. அவன்தான் ராஜராஜன்.
கட்டாயம் மேலே குறிப்பிட்ட இடுகையை படியுங்கள் நண்பர்களே.
(ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று, அப்போதைய போர் மரபிற்கு மாறாக அவன் தலையை கொய்து ஒரு கழியில் மாட்டி அதை தஞ்சைக்கு ஊர்வலமாக கொண்டு வந்து அரண்மனை முன் நட்டு உள்ளான். இதனால் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள், இந்த முன் குடுமி அந்தணர்கள் உதவியோடு, ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொன்று விட்டனர்)

2 comments:
I feel proud to know that such an emperor lived in Tamilnadu. Thanks for sharing.
சிவக்குமார்,
the link is not accessable now. if you could find content of the link any where, please post it here and give us the new link.
Thanks,
/Periathambi
Post a Comment